சுப்ரமணிய பாரதி பள்ளியில் மகளிர் தின விழா

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தினவிழா நடந்தது.

விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசீலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குநர்கள் ஹரிஷ் குமார், மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு பல்வேறு வியைாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்ற ஆசிரியை மற்றும் மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவிகள் வைஷ்ணவி, விஷாலி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பள்ளி நிர்வாக இயக்குநர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement