சிறப்பு முகாம்

சங்கராபுரம், மார்ச் 11--

சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் நடந்தது.

குடிமை பொருள் தனி வருவாய் ஆயவாளர் சுப்ரமணியன் வரவேற்றார். வட்ட பொளியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையினர் கலந்து கொண்டனர்.

முகாமில் நகல் குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் என பொது மக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.

Advertisement