மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை : இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், உடுமலை இ.கம்யூ., கட்சி அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

மாதர் சம்மேளன கொடியை தாலுகா தலைவர் குருவம்மாள் ஏற்றி வைத்தார். கருத்தரங்கை மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் சித்ரா துவக்கி வைத்தார்.

மாநில துணை செயலாளர் நதியா, வக்கீல் விஜயநர்மதா, மாவட்ட நிர்வாகிகள் பேபி, செல்வி உள்ளிட்டோர் பேசினர்.

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் முன், இந்திய மாதர் தேசிய சம்மேளன திருப்பூர் புறநகர் மாவட்ட குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், 'சீமானின் பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், நிலுவையிலுள்ள வழக்குகளை உடனே விசாரித்து நீதி வழங்க வலியுறுத்தியும், கோஷமிட்டனர்.

Advertisement