காரமடை தேர் திருவிழாவுக்கு 80 சிறப்பு பஸ்கள்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடையில் அரங்கநாதசுவாமி தேர் திருவிழாவையொட்டி 80 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழகம், மேட்டுப்பாளையம் கிளை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காரமடை தேர் திருவிழா நாளை(12ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன், கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.

இதில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டும் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரிக்கு 40 பஸ்கள் இயக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக இன்னமும் கூடுதல் பஸ்கள் தேவைப்படும் பட்சத்தில் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement