சங்கராபுரத்தில் டிராபிக் ஜாம்

சங்கராபுரம் : சங்கராபுரம் பூட்டை ரோட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சங்கராபுரம் பூட்டை ரோடு பஸ் நிலைய சாலையில் மாலை நேரங்களில் கடைகளின் முன் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கின்றனர்.

சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு ஒதுங்கி செல்ல இடமின்றி பஸ் டிரைவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இச்சாலையில் மாலை நேரங்களில் தினந்தோறும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.

எனவே, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement