உதவித்தொகைக்கு பதிவு விவசாயிகள் ஆர்வம் குறைவு
உதவித்தொகைக்கு பதிவு செய்ய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது, வேளாண் துறையினர் மத்தியில் கவலையை அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மானியத் திட்டங்கள், சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்காக, விவசாயிகள், வேளாண்துறை வாயிலாக விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு இம்மாத இறுதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், 62 சதவீத விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 38 சதவீதம் விவசாயிகள் இன்னும் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதாவிடம் கேட்டபோது, 'பதிவு செய்யாமல் விடுபடும் விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்காது. இ-சேவை மையங்கள் மூலமாகவும், கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும், விவசாயிகள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்' என்றார்.
-- நமது நிருபர் -
மேலும்
-
'நம்மை நாமே பாதுகாப்போம்' முறையில் பெண்களுக்கு... மாவட்டத்தில் இதுவரை, 500 பழங்குடியின மாணவிகள் பயன்
-
நிச்சயதார்த்த நிகழ்வில் தந்தை திடீர் மரணம்; உடல் முன்னிலையில் நடந்த மகன் திருமணம்
-
இந்த ஆண்டில் முதல் முறையாக கே.ஆர்.பி., அணை நீர்வரத்து பூஜ்ஜியம்
-
பள்ளி மாணவர்களிடையே பாதிப்பு இருக்கா... தகவல் தெரிவிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
-
சிறுமியின் கைகளை உடைத்த சித்தப்பா
-
இளம்பெண் மாயம்