இப்தார் நோன்பு திறப்பு

மேட்டுப்பாளையம்:L மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் சமூக நல்லிணக்க, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சிறுமுகை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் முகமது அப்பாஸ் தலைமை வகித்தார். நகர செயலாளர் அன்சர் அலி வரவேற்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயலாளர் சபிக் அகமது, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹக்கீம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், பொது மக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Advertisement