ஜி.எஸ்.டி., வரி பயிற்சி கூட்டம் 'ஹெல்ப் டெஸ்க்' துவங்க உறுதி

திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி., வரிப்பயிற்சி கூட்டத்தில், வரி செலுத்துவோர் வசதிக்காக ெஹல்ப் டெஸ்க் அமைக்கப்படும் என வணிக வரி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஜி.எஸ்.டி., வரிச்சட்டத்தின் வரி விதிப்பு விதிகளின் கீழ் வரி விதிப்பில் சலுகைகள் பெற ஆன்லைன் வாயிலாக படிவங்கள் சமர்ப்பிப்பது குறித்து பயிற்சி, வணிக வரித்துறை அலுவலக கூட்டரங்கில், இப்பயிற்சி நேற்று நடந்தது.

துணை கமிஷனர்கள் நல்லரசி, ஷோபனா, நாகராஜ் முன்னிலை வகித்தனர். பாரதிராஜா பயிற்சி அளித்தார். கடந்த 2017 முதல் 2020 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், பிரிவு 73ன் படி, வரித்தொகையை மட்டும் செலுத்தி, வட்டி மற்றும் தண்டத் தொகையில் விலக்கு பெற விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. இதற்கான சிறப்பு படிவங்கள் 1 மற்றும் 2 ஆகியன பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கும் நடைமுறை குறித்து விளக்கப்பட்டது.

வரிப் பயிற்சியாளர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் முத்துராமன், மணிகண்டன், ரவி, வரி பயிற்சியாளர்கள், ஆடிட்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியைத் தொடர்ந்து சந்தேகங்களுக்கு வணிக வரித்துறையினர் விளக்கம் அளித்தனர். மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பித்து, ஜூன் 31ம் தேதிக்குள் விலக்கு பெறவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு உதவி மையங்கள் (ெஹல்ப் டெஸ்க்) அமைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement