சிறுமலையில் குற்ற செயல்களில் போதை நபர்கள் காட்டேஜ்களில் புகுந்து பயணிகளுக்கு தொல்லை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் போதை நபர்கள் காட்டேஜ்களில் புகுந்து தகராறில் ஈடுபடுவது, சுற்றுலா பயணிகளை மிரட்டுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
திண்டுக்கல்லிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்க எப்போதும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் இங்குள்ள காட்டேஜ்களில் தங்கி செல்கின்றனர். இவர்கள் பொழுது போக்கிற்காக வீதிகளில் நடந்து செல்வது, பல்லுயிர் பூங்காவை பார்வையிடுவது, கோயில்களுக்கு செல்வது, காட்டேஜ்களில் உள்ள விளையாட்டு திடல்களில் விளையாடுகின்றனர். அப்போது சிலநபர்கள் ரோட்டோரங்களில் மது அருந்துகின்றனர்.
அப்போது அந்த வழியாக வாகனங்கள், டூவீலர்களில், நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை போதை நபர்கள் வம்புக்கு இழுக்கின்றனர்.
இதனால் இருதரப்பு இடையே அடிதடி ஏற்பட்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் போதையில் காட்டேஜ்களில் புகுந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களையும் தாக்குகின்றனர்.
மார்ச் 7 இரவு சிறுமலையில் உள்ள தனியார் காட்டேஜில் 2 பெண்கள் உட்பட 4 பேர் போதையில் புகுந்து அங்குள்ள ஊழியர்களை தாக்கினர்.
தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியில் வராமல் சிறுமலை முழுவதும் நடக்கிறது. இதனால் காட்டேஜ் உரிமையாளர்கள் முதல் அங்கு சுற்றுலாவிற்காக வரும் பயணிகளும் அச்சமடையும் நிலை உள்ளது.
போலீசார் விடுமுறை, கோடை காலங்களில் அடிக்கடி சிறுமலையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
ரோட்டோரங்களில் நின்று மது அருந்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்