கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை உயிரிழப்பு

1

கோவை: கோவை அருகே கடந்த சில நாட்களாக ஆடுகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வந்த 5 வயது சிறுத்தை வனத்துறையினரின் வலையில் சிக்கியது. மருதமலை வனப்பகுதியில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


@1brகோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதுமட்டுமின்றி 4 ஆடுகளை கொன்று விவசாயி ஒருவருக்கு மன வேதனை கொடுத்தது. சிறுத்தை அட்டகாசம் செய்து வந்தது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மனவேதனை அளித்தது.


இதற்கிடையே பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று தென்பட்டது. பல்கலை மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி வனத்துறையினர் கூறியிருந்தனர்.



இந்நிலையில் இன்று (மார்ச் 11) ஆடுகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் வலையில் சிக்கியது. பூச்சியூர் பழை கட்டடத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்க முயன்ற போது தாக்கியதில் 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர்.


ஆனால் வனத் துறையினர் தீவிர முயற்சி எடுத்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் வலையில் சிறுத்தையை பிடித்து கொண்டு சென்றனர். பிடிபட்ட, 5 வயது பெண் சிறுத்தைக்கு மருதமலை வனப்பகுதியில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Advertisement