வெள்ளலுாரில் அதிக ஆக்கிரமிப்பால் அவஸ்தை

ஒரு ரோடு; பத்து குழிகள்
கோவில்மேடு - சாய்பாபா காலனி இணைப்புச்சாலையில், நுாறு மீட்டருக்குள் பத்துக்கும் மேற்பட்ட குழிகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே நிலையில்தான் உள்ளது. இதனால், தினமும் இப்பகுதியில் விபத்து நடக்கிறது.
- ராகுல்,
கோவில்மேடு.
தாழ்வான கிளையால் இடையூறு
பீளமேடு, 27வது வார்டு, பாரதி காலனி, ஐந்தாவது வீதியில், சாய்பாபா கோவில் செல்லும் வழியில், பெரிய மரம் ஒன்றின் கிளை, மிகவும் தாழ்வாக உள்ளது. கிளை மின் ஒயர்களில் உரசி, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பள்ளி வேன் போன்ற வாகனங்கள் செல்லும் போது கிளை உரசுவதாலும், இடையூறு ஏற்படுகிறது.
- ஸ்ரீராம், பீளமேடு.
ஆக்கிரமிப்பை அகற்றணும்
வெள்ளலுார், இரண்டாவது வார்டு, ரேசன் கடை மற்றும் கருப்பராயன் கோவில் எதிரில் உள்ள சாலைகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறாக உள்ளது. காலை, மாலை வேளையில் கடும் போக்குவரத்து ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
- ரங்கராஜன், வெள்ளலுார்.
கழிவுநீர் தேக்கம்
ஆவாரம்பாளையம், காமராஜ் நகரின், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது வீதிகளில், சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யவில்லை. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கியுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
- கோவிந்தராஜ், ஆவாரம்பாளையம்.
தீ விபத்து அபாயம்
பீளமேடு ரயில் நிலைய வளாகத்தில், கடும்வெயில் காரணமாக புல்வெளி பகுதி முழுவதும் காய்ந்துள்ளது. ஸ்டேஷன் வளாகம் முழுவதும் புற்கள் காய்ந்து சறுகாக உள்ளது. எளிதில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், புற்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
- சக்திவேல், பீளமேடு.
ஏறி, இறங்க முடியல!
ஒண்டிப்புதுார், 57வது வார்டு, எஸ்.எம்.எஸ்., லே அவுட் இரண்டாவது வீதியில் பாதாள சாக்கடைக்காக கட்டப்பட்ட சிறிய பாலம், சாலையை விட ஒரு அடி உயரமாக இருக்கிறது. பெரிய வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.
- பழனிச்சாமி, ஒண்டிப்புதுார்.
சாக்கடையில் மதுபாட்டில்
சிங்காநல்லுார், பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, சக்தி விநாயகர் கோவில், கமலா குட்டை வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யாததால், மண் நிரம்பி உள்ளது. அருகிலுள்ள டாஸ்மாக்கில் மது அருந்துவோர், பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர் மற்றும் மதுபாட்டிகளை சாக்கடை கால்வாயில் வீசுகின்றனர்.
- ஜென்சி, சிங்காநல்லுார்.
போக்குவரத்து நெருக்கடி
மருதமலை ரோட்டிலிருந்து, சீரநாயக்கன்பாளையத்திற்கு வரும் அனைத்து சாலைகளும் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வருவது கூட கடினமாக உள்ளது. சாலையை விரிவாக்கம் செய்வதுடன், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும்.
- சங்கர், சீரநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி வளாகத்தில் பரிதாபம்
டாடாபாத், ராஜூ வீதி, கோவை வடக்கு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் அலுவலகம் அமைந்துள்ள மாநகராட்சி வளாகத்தில், குப்பை மலைபோல் குவிந்துள்ளது. கட்டடக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை என அதிக கழிவு குவிந்துள்ளது. விரைந்து சுத்தம் செய்ய வேண்டும்.
- துரை, டாடாபாத்.
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்