'சீல்' வைக்கப்பட்ட 'பாரில்' உயிரிழந்து கிடந்த தொழிலாளி

பல்லடம் : திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் குழந்தைவேல், 41. பனியன் தொழிலாளி. பல்லடம் அருகே, கரைப்புதூர், பொன் நகர் பகுதியில், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். குழந்தைவேலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம், அவரப்பாளையம் 'டாஸ்மாக்' மதுக்கடைக்குச் சென்ற அவர், காலை மதுக்கடை திறந்தது முதல் இரவு, 8.30 மணி வரை மது அருந்தி உள்ளார். இதனால், அமர்ந்த நிலையில் அங்கேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற பல்லடம் போலீசார், குழந்தைவேலின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரப்பாளையத்தில், மதுக்கடையுடன் இணைந்துள்ள அனுமதியற்ற 'பார்', சமீபத்தில்தான் மூடி 'சீல்' வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த 'பார்' விதிமுறை மீறி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 'சீல்' வைக்கப்பட்ட இந்த பாரில்தான் குழந்தைவேல், காலை முதல் மது அருந்தி வந்ததும், உயிரிழந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால், 'டாஸ்மாக்' அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆதரவுடன், 'சீல்' வைக்கப்பட்ட 'பார்' இயங்கி வருவது இதனால், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Advertisement