ரூ.50 கோடியில் டைடல் பார்க் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்

ஆத்துார்: ஆத்துார் அருகே சீவல்சரகில் 50 கோடி ரூபாயில் டைடல் பார்க் , 150 கோடி ரூபாயில் இ.எஸ்.ஐ. ,மருத்துவமனையும் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ள நிலையில் இதன் இடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் முதன்முறையாக டைடல் பார்க் (மென்பொருள் பூங்கா) சீவல்சரகு சுதனாகியபுரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனருகே 150 கோடி ரூபாயில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. சீவல்சரகு சுதனாகியபுரத்தில் உள்ள இடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பெங்களூரு, சென்னை உட்பட வெளியிடங்களில் ஐ.டி., துறையில் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொறியியல் படித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் சீவல்சரகு சுதனாகியபுரத்தில் 8 மாடி கட்டடங்களுடன் டைடல் பார்க் அமைய உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் நலன் கருதி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது, '' என்றார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தாசில்தார் முத்துமுருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உடனிருந்தனர்.

-

Advertisement