மக்கள் குறைதீர் கூட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 230 மனுக்களை வழங்கினர். மாற்றுத்திறானளிகள் நலத்துறை சார்பில் 7 பேருக்கு தலா ரூ.16,199 மதிப்பிலான அலைபேசிகள் வழங்கப்பட்டது.
பூதிப்புரம் கெப்புரெங்கன்பட்டி முருகன் வழங்கிய மனுவில், 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் மண்டகபடி வாரிதாரர்கள் பெயர், ஊர் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்படும் விளம்பரங்களில் மண்டகப்படி தாரர்களை மதிப்பதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.
தேனி நகராட்சி காந்திநகர் பாலா மனுவில், ஒண்டிவீரன் நகரில் குடிநீர் வழங்குவதில்லை, அதே போல் குறிஞ்சிநகர் பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பலஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இதனால் பலரும் அவதிக்குள்ளாகுகின்றனர். அடிப்படை வசதிகளை நகராட்சி நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'என கோரினார்.