மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது

தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம்தலைமையிலான போலீசார் காமயக் கவுண்டன்பட்டி டாஸ்மாக் அருகே ரோந்து சென்றனர்.

அதேப்பகுதி கிழக்குரதவீதி மகேந்திரன் 43, ஆனந்தன் 47, ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்த 54 மதுபாட்டில்கள், மதுவிற்ற பணம் ரூ.1150ஐ கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும்உத்தமபாளையம், ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 10க்கும் மேற்பட்ட சட்ட விரோத மதுகடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement