விபத்தில் இருவர் பலி

கோவை : மதுரை சோழவந்தான், தெற்கு ராதா தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன், 24. கோவை நவஇந்தியாவில் உள்ள வங்கியில், ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக பீளமேடு, ஸ்ரீ நகர் பழையூர் ரோட்டில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, சுந்தரேஸ்வரன் பைக்கில் நஞ்சுண்டாபுரம் ரோடு வழியாக போத்தனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே, சுந்தரேஸ்வரன் உயிரிழந்தார். போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் சேரன் மாநகர், வெங்கடாஜலபதி நகரை சேர்ந்த சுப்பிரமணி, 59 என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ் வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. சுப்ரமணி உயிரிழந்தார். புகாரின் பேரில், போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் விளாங்குறிச்சி காந்தி தெருவை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ், 25 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement