மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தலில் தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து அவரது உருவப்பொம்மைக்கு தீ வைத்தனர்.

வடுகபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் உருவபொம்மைக்கு தீ வைத்தனர்.

ஆண்டிபட்டி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் அநாகரிகமானவர்கள் என்று பேசியதை கண்டித்து ஆண்டிபட்டியில் தி.மு.க., வினர் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீசார் தீயை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை அப்புறப்படுத்தினர்.

Advertisement