போபண்ணா ஜோடி ஏமாற்றம்

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் டோடிக் ஜோடி, பிரிட்டனின் டிராப்பர், செக் குடியரசின் மச்சாக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, டென்மார்க்கின் கோரனாசன் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர், போலந்தின் ஜான் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3-6 என இழந்த பாம்ப்ரி ஜோடி அடுத்த செட்டை 7-6 என வென்றது. பின் நடந்த 'சூப்பர் டைபிரேக்கரில்' 10-8 என அசத்தியது.
2 மணி நேரம், 1 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 7-6, 10-8 என வெற்றி பெற்றது.

Advertisement