தீப்தி சர்மா 'நம்பர்-5' * ஐ.சி.சி., தரவரிசையில்...

துபாய்: ஒருநாள் அரங்கில் ஆல் ரவுண்டர் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. ஒருநாள் போட்டியின் சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 27, 344 புள்ளியுடன், ஒரு இடம் முன்னேறி, ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனர் (470) உள்ளார்.
ஒருநாள் அரங்கில் பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டும் 'டாப்-10' பட்டியலில் உள்ளார். இவர் 738 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் லாரா (773) உள்ளார்.
ஒருநாள் பவுலர்களுக்கான வரிசையில் தீப்தி சர்மா, நான்காவது இடத்தில் உள்ளார். தவிர, 'டி-20' ஆல் ரவுண்டர் வரிசையில் தீப்தி சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும்
-
சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி