இரண்டு தங்கம் வென்றார் ரமேஷ் * உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில்

புதுடில்லி: உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் இந்தியாவின் ரமேஷ் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நேற்று துவங்கியது.
ஆண்களுக்கான 100 மீ., (டி 54 பிரிவு) வீல் சேர் ஓட்டத்தில் இந்தியாவின் ரமேஷ் சண்முகம், 16.72 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் அனில் குமார் (17.32) வெண்கலம் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்க வீரர் அப்துல்லா (16.76) வெள்ளி வென்றார்.
தொடர்ந்து 1500 மீ., போட்டி நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த ரமேஷ், 3 நிமிடம், 27.08 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரர் அனில் குமார் (4:03.97) வெள்ளி கைப்பற்றினார்.
ஆண்கள் டி 47 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பவிக்குமார் (11.46 வினாடி) தங்கம் வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப் 33, 34) இரண்டு பேர் மட்டும் பங்கேற்றனர். இந்தியாவின் தேவர்ஸ்ரீ சசான் (11.34 மீ.,) இரண்டாவது இடம் பிடித்தார். உஸ்பெஸ்கிதான் வீரர் ஓய்பெக் (18.05 மீ.,) முதலிடம் பெற்றார்.
பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் 3 பேர் மட்டும் பங்கேற்றனர். பிரேசிலின் மரினோ (11.17 வினாடி), இந்தியாவின் விஷ்ணு (12.39), பிரகதீஷ்வர ராஜா மூர்த்தி (12.94) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பிரீத்தி வெள்ளி
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் (14.85 வினாடி) வெள்ளி வென்றார். ஆஸ்திரேலியாவின் ரியான்னன் (13.14) தங்கம் கைப்பற்றினார்.
ஒருவர் மட்டும்...
பாரா தடகளத்தில் பங்கேற்க இருந்த உலகின் முன்னணி நட்சத்திரங்கள், இந்திய வீரர், வீராங்கனைகள் பலர், கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகினர். டி 42 பிரிவு உயரம் தாண்டுதலில் பங்கேற்க இருந்த லோகேஷ், ஷைலேஷ் குமார், வருண் சிங் என 3 பேர் விலகினர். இதனால் ராம்சிங்பாய் என, ஒரு போட்டியாளர் மட்டும் வந்தது வினோதமாக இருந்தது.
காரணம் என்ன
பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஹாரியா கூறுகையில்,'' இந்திய நட்சத்திரங்கள் பெரும்பாலும், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தயாராகி வருகின்றனர். அதில் எப்படியும் பதக்க வெல்ல வேண்டும் என பயிற்சியில் உள்ளனர். இதனால் தான் டில்லி போட்டியில் கவனம் செலுத்தவில்லை,'' என்றார்.
மேலும்
-
சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி