2027ல் ஏ.ஐ., துறையில் 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்; ஆய்வில் தகவல்

2

புதுடில்லி: '2027ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்' என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.



ஒவ்வொரு தொழிலிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ஏ.ஐ., துறை குறித்து பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027ம் ஆண்டிற்குள் ஏ.ஐ., துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும்.


இதனால் ஏ.ஐ., துறையில் திறமையான 23 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். ஏ.ஐ., துறையில் திறமையான பணியாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஏ.ஐ., தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே காலகட்டத்தில் ஊதியம் 21 சதவீதம் அதிகரித்து வருகிறது.


குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ., பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜெர்மனியில் 2027ம் ஆண்டுக்குள் ஏ.ஐ., பணியாளர்கள் 70 சதவீதம் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement