கள்ளக்குறிச்சி பகுதியில் திடீர் மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெய்த 'திடீர்' மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 1:00 மணியளவில், திடீரென வானத்தில் மேகங்கள் சூழ்ந்து, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மொத்தம், 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்தது.

'பெஞ்சல்' புயலால் நிரம்பிய ஏரி மற்றும் குளங்களில், கடும் வெயில் காரணமாக, நீர் வற்றியது. இந்த நிலையில் பல மணி நேரங்களாக, பெய்த இடைவிடாத மழையால் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு, மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் வெயிலால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்த நிலையில், 'திடீர்' மழை, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement