இரு பெண் குழந்தைகள் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு, தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்ச வரம்பு, ரூ.1.20 லட்சமாக, உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, வருமான சான்று, மற்றும் இரண்டாவது பெண் குழந்தை 3 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் பிறப்பு சான்று, பெற்றோர் சாதி சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பயனாளிகள் வரும், 15 ம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement