உயரமான கட்டடங்களில் விபத்து; பத்திரமாக மீட்க வீரர்களுக்கு பயிற்சி

கோவை; விபத்தில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது குறித்த, ஐந்து நாள் பயிற்சி முகாம், நேற்று துவங்கியது. வரும் 15ல் நிறைவு பெறுகிறது.

பயிற்சி முகாமை, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி துவக்கி வைத்தார்.

முகாமில், உயர்ந்த கட்டடங்கள், செல்போன் டவர்கள், மலைகள், உயரமான மரங்கள், அபார்ட்மென்ட்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை, மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கோவை மாவட்ட தீயணைப்புத்துறையை சேர்ந்த, 20 வீரர்கள் மற்றும் இரண்டு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''வீரர்கள் உயரமான டவர்கள், அபார்ட்மென்ட்கள், உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement