சிறுதானிய உற்பத்திக்கு வழிவகை; துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்

கோவை; வேளாண் பல்கலையில் சிறுதானிய விழா, கருத்தரங்கு, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் சிறுதானிய மகத்துவ மையம் துவங்கப்பட்டு, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

''தேசிய அளவில், சிறுதானியங்களின் சீர்மிகு உற்பத்திக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

வேளாண் துறை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை, வணிகத்துறை, விதைச் சான்றளிப்புத்துறை அலுவலர்கள், வேளாண் பல்கலை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வேளாண் பட்டதாரிகளை, தொழில் முனைவோராக்குதல் திட் டத்தின் கீழ், பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பண்ணை இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ், கிணத்துக்கடவு, வட்டார பயனாளிக்கு பவர் டிரில்லர் எந்திரத்துக்கான தொகை, ரூ1.13 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டது.

Advertisement