திருக்காஞ்சியில் தேரோட்டம் இன்று மாசி மக தீர்த்தவாரி

வில்லியனுார் : திருக்காஞ்சியில் இன்று 12ம் தேதி, காலை மாசிமக தீர்த்த வாரி நடக்கிறது.

வில்லியனுார், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி மாலை பாரிவேட்டை, 8ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி இரவு திருக்கல்யாண உற்வசம் நடந்தது.

நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வடம் பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தார். திருக்காஞ்சி முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பகல் 12:15 மணிக்கு நிலையை அடைந்தது.

முக்கிய விழாவான மாசி மக தீர்த்தவாரி திருவிழா இன்று (12ம் தேதி) நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு மேல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம், அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சார்யார், கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

Advertisement