கையெழுத்து இயக்கம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் பா.ஜ.,கிழக்கு ஒன்றியம் சார்பில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாய்லெட்சுமி முன்னிலை வகித்தார்.

முதுகுளத்துார் அருகே சடையனேரி, காக்கூர், கீழப்பனையூர், கருமல் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement