கவர்னர் மாளிகை புதுப்பிக்க ரூ.10 கோடி அரசு ஒதுக்கீடு
புதுச்சேரி: பொதுப்பணித் துறை குறித்த முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:
ஏ.எப்.டி., நிதியுதவியுடன் ரூ.123.25 கோடி மதிப்பில் 14 குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்தல் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அனைவருக்கும் குடிநீர் வழங்க ரூ.534 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
சாலை, குடிநீர் வழங்கல் மேம்பாட்டு பணி உள்ளிட்ட ஒட்டு மொத்த உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ.4,750 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் செயல்படுத்த மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மத்தியபங்கு 60 சதவீதம், மாநில பங்கு 40 சதவீதம் நிதி பகிர்வில், ரூ.60 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய சாலை உட்கட்டமைப்பு நிதியில் 20 கோடி மதிப்பீட்டில் காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் ஏனாம் பகுதியில் ரூ. 199.71 கோடியில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுச்சேரி கவர்னர் மாளிகை பழமை மாறாமல் புதிய மாளிகை கட்ட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?