அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.70 கோடியில் மேம்பாடு

பட்ஜெட் அறிவிப்பு;

புதுச்சேரியில் அருந்ததிபுரம், சின்ன பொய்கை ஆகிய இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அரியாங்குப்பம், சுப்பையா நகர், காரைக்கால், காரைக்கோவில்பத்து பகுதி உட்புறசாலைகள், கழிவுநீர் வாய்க்கால் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். பிரதமர் வீடு வசதி திட்டத்தின் கீழ் தற்போது கட்டப்பட்டு வரும் பல்வேறு நிலைகளில் உள்ள 3,300 வீடுகளும், 2025-26ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். காரைக்கால் அன்பு நகரில் 250 குடியிருப்புகள் பிரதமர் வீட்டு வசதி நகர்புற திட்டத்தின் கீழ் கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.

Advertisement