ரயிலில் கஞ்சா கடத்தல்; இருவர் தப்பியோட்டம்

திருப்பூர்; விவேக் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்த, இரு வர் போலீசாரை கண்டதும் கஞ்சா பொட்டலத்தை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்களில் எளிதாக கஞ்சா பொட்டலத்தை கடத்தி வருவதை அறிந்த மாநகர போலீசார் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை கண்காணித்து கஞ்சாவை கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லகூடிய விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது.

மாநகர தனிப்படை போலீசார் பயணிகளை கண்காணித்தனர். பொது பெட்டியில் சந்தேகப்படும் விதமான நபர்களிடம் விசாரித்து சோதனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த, இருவர் பேக்கை போட்டு விட்டு தப்பியோடினர்.

பேக்கை திறந்து பார்த்த போது விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட, ஒன்பது கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

பறிமுதல் செய்ததிருப்பூர் வடக்கு போலீசார் தப்பி சென்றவர்யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement