பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேரோட்ட விழா
பத்ரகாளியம்மன் கோவில் சின்ன தேரோட்ட விழா
மேட்டூர்:மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசி மக திருவிழா கடந்த, 5ல் தேர் பொங்கல், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று மாலை, 4:00 மணிக்கு சின்னதேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
அறநிலையத்துறை தக்கார் இளையராஜா, செயல் அலுவலர் சுதா, பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
சக்திமாரியம்மன்அதேபோல் ஆத்துார், புதுகொத்தாம்பாடி சக்திமாரியம்மன், சக்தி செல்லியம்மன், விநாயகர் கோவில் தேர் திருவிழாவுக்கு, கடந்த, 4ல் காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது. நேற்று சக்தி மாரியம்மன் சுவாமி தேரை அலங்காரம் செய்து, முக்கிய வீதிகள் வழியே பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று, சக்தி செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடக்கிறது.
மேலும்
-
காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேட்டை மாரியம்மன்
-
கூட்டுறவு பணியாளருக்கு நாளை குறைகேட்பு முகாம்
-
ரயிலில் கஞ்சா கடத்தல்; இருவர் தப்பியோட்டம்
-
ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
மழை பொழிந்தது: மக்கள் மனம் குளிர்ந்தது!
-
'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?