குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருத்தணி:திருத்தணி நகராட்சி மேட்டுத்தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும், 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டுத்தெரு எல்லையம்மன் கோவில் அருகே சாலை யில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படும் தண்ணீர் வெளியே செல்வதை நகராட்சி நிர்வாகம் தடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

இதனால் அவ்வழியாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த குடிநீர் குழாய் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement