பசுமை ஆற்றலுக்கு மாறும் தொழிற்சாலைகளுக்கு மானியம்

பட்ஜெட்டில் தொழில் துறையில் குறித்த முக்கிய அறிவிப்புகள்:

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்தல் திட்டம் புதுச்சேரியில் பிப்டிக் மூலம் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் நிறுவதற்கு தற்போது மானியம் வழங்குவது போல், பசுமை ஆற்றலை ஊக்குவிக்க சூரிய மின் தகடுகள், சூரிய மின் சக்தி சேமிப்பு கலன்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மானியம்போல் அரிசி ஆலைகளுக்கும் மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜவுளி கழகத்தின் வசம் உள்ள சுதேசி-பாரதி பஞ்சாலைகளின் சொத்துகளை திரும்ப பெற இந்த நிதியாண்டில் 35.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொழில் துறை மேம்பாட்டு வங்கியின் வசம் உள்ள பிப்டிக் நிறுவனத்தின் 21.14 சதவீத பங்குகள் அரசே பெற்றுக்கொள்ள நடப்பு நிதியாண்டில் 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement