பத்துக்கண்ணில் புது காவல் நிலையம் ஐ.ஆர்.பி.என்.,க்கு தனி அலுவலகம்

புதுச்சேரி பட்ஜெட்டில் காவல்துறைக்கு அறிவித்த அறிவிப்புகள்;

காவல்துறை சிறப்பாக செயல்பட்டு, அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க, தேவையான அத்தியாவசிய நவீன உபகரணங்கள் ஒயர்லஸ், வாகனங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அனைத்து உட்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஐ.ஆர்.பி.என்., பிரிவுக்கு தனி அலுவலக கட்டடம் கட்டப்படும். போலீசாருக்கு காலத்துடன் பதவி உயர்வு வழங்கப்படும்.

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம், காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும். பத்துக்கண்ணு கிராமப்பகுதியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.

Advertisement