அனைத்து அரசு கட்டடங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டம்

மின் துறை வளர்ச்சி பணிகள் குறித்த முக்கிய அம்சங்கள்:

புதுச்சேரியில் உள்ள அனைத்து மின்விநியோக கட்டமைப்புகளை நவீனப்படுத்தல், புனரமைத்தல், மேம்படுத்தும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.472 கோடியில் மத்திய அரசின் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட மதிப்பீட்டில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பாகவும், 40 சதவீதம் நிதி நிறுவனங்களிடம் இருந்து அரசு கடனாக பெற உள்ளது. மின் துறையின் மின் சுமை கண்காணிப்பு மற்றும் மின் தரவுகள் ரூ.35 கோடியில் நவீனப்படுத்தப்படும்.

பிரதமர் இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 13,000 வீடுகளில் மொத்தம் 39 மெகாவாட் திறனில் சூரிய மின்சக்தியை வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இதுவரை ரூ.3.01 கோடி மானியத்தில் 624 வீட்டின் கூரைகளில் சூரிய மின் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,210 அரசு கட்டடங்களில் 27 மெகாவாட் திறனுடைய மின் உற்பத்தி கண்டறியப்பட்டுள்ளது. 500 அரசு கட்டடங்களில் 14 மெகாவாட் திறனுடைய சூரிய மின் நிலையங்களை அமைக்க ஒப்பந்தபுள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement