மத்திய அமைச்சருடன் தமிழக மீனவர்கள் சந்திப்பு

ராமேஸ்வரம்:மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதிகள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேற்று மாலை சந்தித்து பேசினர். அப்போது, ''ஏப்ரலில் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அதற்குள் தமிழக மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்,'' என, அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை சிறையில் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் உள்ள மீனவர்கள், இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், மீனவர்களை விடுவிக்காவிடில் மார்ச் 21ல் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ரயில் மறியல் நடக்கும் என, மீனவர்கள் அறிவித்தனர்.
பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முறையிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் சேசு, எமரிட், ஜெகதீஷ், டயஸ், விக்டோரியா, சின்னத்தம்பி, பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் நேற்று காலை மதுரையில் இருந்து விமானத்தில் டில்லி சென்றனர்.
மாலையில் மீனவர்கள், அமைச்சர் ஜெய்சங்கரை அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என, முறையிட்டனர்.
அவர்களின் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர், ''ஏப்ரலில் பிரதமர் இலங்கை செல்ல இருக்கிறார். அதற்குள் தமிழக மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கவலைப்பட வேண்டாம்,'' என்று தெரிவித்தார்.
மேலும்
-
வண்டலுார் முதல் எஸ்.பி.கோவில் வரை தேசிய நெடுஞ்சாலையில் 7 நடைமேம்பாலம்
-
சத்தீஸ்கர் பா.ஜ., முதல்வருக்கு தமிழக விவசாயிகள் பாராட்டு
-
அமெரிக்காவால் தேடப்பட்ட குற்றவாளி கேரளாவில் கைது
-
மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு '3டி லேசர்' திட்ட பணி துவக்கம்
-
10,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி தனிநபர் செயல்பாட்டுக்கு எதிராக போராட்டம்
-
பயிர்களை நாசமாக்கும் குரங்குகள் திருப்போரூர் விவசாயிகள் வேதனை