பயிர்களை நாசமாக்கும் குரங்குகள் திருப்போரூர் விவசாயிகள் வேதனை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பெரிய இரும்பேடு, முள்ளிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இங்கு நெல்பயிர், தொட்டக்கலை சார்ந்த பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேற்கண்ட பகுதிகளில் வீடுகள், விவசாய நிலங்களில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கிறது.

இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன.

உணவுக்காக இக்குரங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

வீடுகளுக்குள் புகுந்தும், உணவுப் பொருட்களை தின்கின்றன. சிறுவர்கள் விரட்டினால், அவர்களை கடிக்கின்றன.

இதனால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, பயிர்கள் சாகுபடி செய்வதற்கும் தயங்குகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குரங்குகளை பிடித்து மலை மற்றும் வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement