முதல்வர் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்: அண்ணாமலை

சென்னை:'முதல்வர் ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்...' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வரும், 2025 - 26ம் நிதியாண்டிற்கான தி.மு.க., அரசின் பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம் நாணயத்தில் இணைக்கப்பட்டது.
இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன். முதல்வர் ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்.
தேவநாகரி எழுத்தை அடிப்படையாகக் கொண்டதால், ரூபாய் சின்னம் கைவிடப்பட்டதாக, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் கூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தன்னை இதுபோன்ற முட்டாள்களால் சூழ்ந்து கொண்டுள்ளார்.
வெறும் விளம்பரங்களும், திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளும் தான், தி.மு.க., அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் சுருக்கம். கருணாநிதி ஆதரித்ததை, அவரது மகன் நிராகரிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சத்தீஸ்கர் பா.ஜ., முதல்வருக்கு தமிழக விவசாயிகள் பாராட்டு
-
அமெரிக்காவால் தேடப்பட்ட குற்றவாளி கேரளாவில் கைது
-
மத்திய அமைச்சருடன் தமிழக மீனவர்கள் சந்திப்பு
-
மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு '3டி லேசர்' திட்ட பணி துவக்கம்
-
10,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி தனிநபர் செயல்பாட்டுக்கு எதிராக போராட்டம்
-
பயிர்களை நாசமாக்கும் குரங்குகள் திருப்போரூர் விவசாயிகள் வேதனை