ரயில்கள் தொடர்ந்து கண்காணிப்பு; ஒரு வாரத்தில் சிக்கிய 35 கிலோ கஞ்சா
திருப்பூர்; வெளி மாநிலத்தில் இருந்து வரும் ரயில்களை போலீசார் கண்காணித்த காரணத்தால், திருப்பூருக்கு கடத்தி வரப்பட்ட, 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், கைது செய்யப்படும் நபர்கள் ஒடிசா, பீஹார் போன்ற வடமாநிலங்களில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எளிதாக ரயில்களில்கடத்தி வந்து நகரில் புழக்கத்தில் விடுவது தெரிந்தது.
இதனை கண்டறிந்து கைது செய்யும் வகையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களை கண்காணித்து கஞ்சா கும்பலை கைது செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தன்பாத், விவேக் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் ஒடிசா உட்பட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தினரை கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ரயிலில் கடத்தி வரப்படும் கஞ்சா, குட்கா ஆகிய போதை பொருட்களை கொண்டு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான நபர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்கிறோம்,' என்றனர்.
மேலும்
-
10,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி தனிநபர் செயல்பாட்டுக்கு எதிராக போராட்டம்
-
பயிர்களை நாசமாக்கும் குரங்குகள் திருப்போரூர் விவசாயிகள் வேதனை
-
தனி நபர் வீட்டு மண் அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்
-
குற்றத்தடுப்பு நடவடிக்கை; மாவட்ட போலீசார் தகவல்
-
மதுராந்தகம் - உத்திரமேரூர் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
-
முதல்வர் எவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்: அண்ணாமலை