கண் பரிசோதனை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

மருத்துவ அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். மதுரை அரசு மருத்துவமனை கண் பிரிவு மருத்துவக் குழுவினர் 60 பேரை பரிசோதித்தனர். பாதிக்கப்பட்ட 8 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். கண்புரை நோயாளிகள் 7 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை வட்டார கண் மருத்துவ பரிசோதகர் ரவிக்குமார் செய்திருந்தார். நர்ஸ் கவிதா நன்றி கூறினார்.

Advertisement