குடை மிளகாய் முட்டை தொக்கு

குடை மிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், கண் பார்வை மேம்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தவும் முடியும்.
குடை மிளகாயில் கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம். முட்டையிலும் கிரேவி செய்யலாம். ஆனால் குடை மிளகாய், முட்டை காம்பிஷேனசில் சூப்பரான குடை மிளகாய் முட்டை தொக்கு செய்யலாம். பச்சை, சிவப்பு நிற குடை மிளகாயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவைப்படும் பொருட்கள்
ஒரு குடை மிளகாய்
நான்கு முட்டை
ஒரு டீஸ்பூன் - சிக்கன் 65 மசாலா
ஒரு டீஸ்பூன் - சோம்பு
ஒரு கொத்து கறிவேப்பிலை
ஒரு டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது
இரண்டு பெரிய வெங்காயம்
இரண்டு தக்காளி
அரை டீஸ்பூன் - கடுகு, உளுந்தம்பருப்பு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சற்று சூடான பின், சோம்பு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். நறுக்கி வைத்து இருக்கும் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை, நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்க வேண்டும். நன்கு மசிந்து வரும் போது மிளகாய் பவுடர், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
முக்கால் பதம் வெந்த பின், குடை மிளகாயை நறுக்கி சேர்க்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் முட்டையை நன்கு வேக வைக்கவும். கிரேவி நன்கு வெந்த பின், அவித்த முட்டையை 'கட்' செய்து அதனுடன் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தை வைத்து வாணலியை ஐந்து நிமிடம் மூடி விடவும். பின், கொத்தமல்லி இலை துாவி இறக்கினால் சுவையான குடை மிளகாய் முட்டை தொக்கு தயார்.
இந்த தொக்கை பழைய சாதம், தக்காளி சாதம், இட்லி, சப்பாத்தி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். திடீரென அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, இதை செய்து சாப்பிட்டால், அசைவம் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ஒரே முறை செய்து சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் செய்து சாப்பிட தோன்றும்.
- நமது நிருபர் -
மேலும்
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்