தென்மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ்

மதுரை: தென்மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி மாணவி பாலநிவேதிதா 10 வயது பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

12 வயது பிரிவில் அதிர்ஷ்டகுமார், 14 வயது பிரிவில் பிரகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள், பயிற்சியாளர் கருணாகரனை தாளாளர் ஆனந்த், துணைத்தலைவர் பழனிகுமார் பாராட்டினர்.

Advertisement