பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'

சென்னை: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க சென்றதால், அமைச்சர் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தியாகராஜன் , சபைக்கு வரவில்லை.இது பற்றி எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள் பலரும் விசாரித்துக் கொண்டனர். அப்போதுதான் அமைச்சர் தியாகராஜன் கேரளா சென்ற தெரியவந்தது.
லோக்சபா தொகுதி மறுவரையை மேற்கொள்ளக் கூடாது என, மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது தொடர்பாக, சென்னையில் 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க வரும்படி, 6 மாநில முதல்வர்கள் உள்பட, 29 மாநில கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதை, அமைச்சர்கள் நேரில் சென்று வழங்க, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை முதல்வர் நியமித்துள்ளார். அதன்படி, அமைச்சர்கள் நேரு, வேலு, பொன்முடி உள்ளிட்டோர், அண்டை மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களை சந்தித்து திரும்பியுள்ளனர்.
ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திப்பதற்கு அமைச்சர் தியாகராஜன், திருவனந்தபுரம் சென்றதால், அவர் சபைக்கு வரவில்லை. கேரளா முதல்வரை, அமைச்சர் தியாகராஜன் மற்றும் எம்.பி., தமிழச்சி ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த படம் தி.மு.க., தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் ஆன தியாகராஜன், நிதித்துறையில் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றார். அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், அவரிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக, முக்கியத்துவம் இல்லாத தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது, சட்டசபையில் பேசுபொருளாக இருந்தது.
மேலும்
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்