பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை; நிலத்தகராறில் அண்டை வீட்டுக்காரர் ஆத்திரம்

சோனிபட்; ஹரியானாவில் பா.ஜ., தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


ஜவாஹரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா. இவர் பா.ஜ., தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தலையில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் பறந்தது.


சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், சுரேந்திரா கொல்லப்பட்டதை கண்டனர். அவரது தலையில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தது.


இந்த சம்பவம் குறித்து உதவி கமிஷனர் ரிஷிகந்த் கூறியதாவது; கொல்லப்பட்ட சுரேந்திராவுக்கும், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பிடிபட்டுள்ள மோனு என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.


அதன் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.முதல் கட்ட விசாரணை மட்டுமே நிறைவடைந்துள்ளது. முழுமையான விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரியவரும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement