தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை


சென்னை: '' தமிழகத்தில் இன்று முதல் 17 ம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்'', என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ( மார்ச்15) வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


வெப்பநிலை

15 முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அதன் பிறகு இரண்டு நாட்கள் சற்று குறையலாம்.

சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியதை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு என எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement