தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்

புதுடில்லி: நாட்டில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருக்கிறார்கள். அதில் மேற்குவங்கம் தான் முதலிடத்தில் உள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துபூர்வமாக பதிலளித்து பேசியதாவது:
பெரும்பாலான தத்தெடுக்கும் பெற்றோர், ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகளையும், வயது குறைந்த குழந்தைகளைத்தான் தத்தெடுக்க விரும்புகிறார்கள். தத்தெடுப்பு போர்ட்டலில் இதுபோன்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கலாம்.
சமீபத்திய புள்ளிவிபரப்படி, 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருக்கிறார்கள், இதில் மேற்கு வங்கம் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது.
தத்தெடுப்புக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான வளர்ப்பு வீடுகளை வழங்குவதற்கு மேலும் பல தத்தெடுப்பு மையங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தேவைப்படுகின்றன. மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கு அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு சாவித்ரி தாக்கூர் கூறினார்.


மேலும்
-
தமிழை அறிமுகம் செய்த பேராசிரியர்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெகிழ்ச்சி
-
தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? அன்புமணி கண்டனம்
-
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியமா?
-
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா: ரூ.12 லட்சம் பங்கு பத்திரத்துடன் தவித்தவருக்கு கை மேல் கிடைத்தது உதவி
-
எட்டாவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?
-
அரசு கட்டுமான பணியில் தரம் முக்கியம்; சில இடங்களில் தரம் இல்லை என்கிறார் சிதம்பரம்!