ஹாமில்டன் 8வது இடம்: ஆஸ்திரேலிய 'பார்முலா-1' தகுதிச் சுற்றில்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய 'பார்முலா--1' கார்பந்தய தகுதிச் சுற்றில் ஹாமில்டன் 8வது இடம் பிடித்தார்.
நடப்பு ஆண்டுக்கான 'கிராண்ட் ப்ரி பார்முலா--1' கார்பந்தயம், 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடக்கிறது. இதன் 'பைனல் ரேஸ்' இன்று நடக்கிறது.
இதன் தகுதிச் சுற்றில் 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், இலக்கை ஒரு மணி நேரம், 15.096 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். இந்த அணியின் மற்றொரு வீரர் ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (1 மணி நேரம், 15.180 வினாடி) 2வது இடத்தை கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய 'ரெட் புல் ரேசிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (1:15.481) 3வது இடம் பிடித்தார். 'நடப்பு ஆஸி., பார்முலா--1 சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் சைன்ஸ் ஜூனியர் ('வில்லியம்ஸ் மெர்சிடஸ்', 1:16.062) 10வது இடத்தை கைப்பற்றினார்.
'பெராரி' அணிக்காக முதன்முறையாக களமிறங்கிய பிரிட்டனின் லீவிஸ் ஹாமில்டன் (1:15.973) 8வது இடத்தை தட்டிச் சென்றார். இந்த அணியின் மற்றொரு வீரர் சார்லஸ் லெக்லெர்க் (மொனாகோ, 1:15.755) 7வது இடம் பிடித்தார்.
மேலும்
-
கஞ்சா விற்றவர் கைது
-
அண்ணணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கை கைது
-
பள்ளி மாணவர்களுக்கு கூல்லிப்: கடைக்கு சீல்
-
முதலீடு எண்ணிக்கை மட்டும் போதாது தரமும் வேண்டும்: சிதம்பரம் கருத்து
-
அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
-
கோடையிலும் குளிருது மூணாறு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி