ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்'

நந்தபுரி: தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

Advertisement