ஹர்மன்பிரீத், சவிதாவுக்கு விருது * இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் உற்சாகம்

புதுடில்லி: சிறந்த ஹாக்கி வீரருக்கான விருதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெற்றார். சிறந்த வீராங்கனைக்கான விருதை கோல்கீப்பர் சவிதா வென்றார்.
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. நேற்று டில்லியில் எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே தலைமையில் ஏழாவது ஆண்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, எச்.ஐ., அமைப்பின் பொதுச்செயலர் போலா நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது இந்திய ஹாக்கியின் நுாற்றாண்டு நிகழ்வுகள், இந்திய அணி 1975ல் பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பை வென்ற தருணம் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
சிறந்த வீராங்கனை விருது வென்ற கோல் கீப்பர் சவிதா கூறுகையில்,'' மிகவும் பெருமையாக உள்ளது. எனது சக வீராங்கனைகள் உதவி இல்லை என்றால் சிறந்த வீராங்கனை விருது வென்றிருக்க முடியாது. எனக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட இது ஊக்கமாக அமையும்,'' என்றார்.
சிறந்த வீரர் விருது வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' தங்களது லட்சியத்தை அடைய கடினமாக முயற்சி செய்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதை இந்த விருது, இளைஞர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு இது ஸ்பெஷல் தினம்,'' என்றார்.
ரூ. 12 கோடி பரிசு
ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில், கடந்த ஆண்டு 8 பிரிவுகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சவிதா, சிறந்த வீராங்கனை, சிறந்த கோல்கீப்பர் என 2 விருதுகளை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்தமாக ரூ. 12 கோடி பரிசாக அளிக்கப்பட்டது.
விருது வீரர்/வீராங்கனை பரிசு
சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 25 லட்சம்
சிறந்த வீராங்கனை சவிதா புனியா ரூ. 25 லட்சம்
கோல்கீப்பர் சவிதா புனியா ரூ. 5 லட்சம்
தற்காப்பு வீரர் அமித் ரோஹிதாஸ் ரூ. 5 லட்சம்
'மிட்பீல்டர்' ஹர்திக் சிங் ரூ. 5 லட்சம்
முன்கள வீரர் அபிஷேக் ரூ. 5 லட்சம்
இளம் வீரர் அராய்ஜீத் சிங் ரூ. 10 லட்சம்
இளம் வீராங்கனை தீபிகா குமாரி ரூ. 10 லட்சம்
தமிழகத்துக்கு கவுரவம்
ஹாக்கி இந்தியாவின் சிறந்த உறுப்பினருக்கான விருது, தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. தமிழக பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி லீக் தொடரை நடத்தி, ஹாக்கியின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மொத்தம் 306 பள்ளிகள் பங்கேற்றன. 500க்கும் அதிகமான போட்டிகள், 45க்கு மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டன. இதில் 5500க்கு அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
உலக சாம்பியன்கள் கவுரவம்
மலேசியாவில் நடந்த உலக கோப்பை பைனலில் (1975, மார்ச் 15) பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, மேஜர் தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
மேலும்
-
உழவர் சந்தை மேம்பாடு, நெல் தொகுப்பு திட்டம்விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்பு
-
ரூ.99 லட்சம் மோசடி: மேலும் 3 பேர் கைது
-
தனி அடையாள எண் பதிவுதுரிதப்படுத்த 18ல் முகாம்
-
குண்டத்தில் விழுந்தவர் பலி
-
வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்
-
'குளத்தில் மீன்கள் வாழ வாய்ப்பில்லை'சுகவனேஸ்வரர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி