இன்று சூரசம்ஹாரம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 16) இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. பங்குனி திருவிழா மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் சுவாமி, தெய்வானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. சூரசம்ஹார லீலையை முன்னிட்டு இன்று தங்க மயில் வாகனத்தில் சுவாமி மட்டும் சம்ஹார அலங்காரத்தில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளுவார். எட்டு திக்குகளிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement